கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு நேற்று (14.09.2020) மாலை விஜயம் செய்து மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு திட்ட தொடர்பிலான விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.


யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் யாழ் மாவட்டத்தின் மீள் குடியேற்றம்,இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன், அமைச்சின் செயலாளர்கள்,மேலதிக செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மேலதிக அரசாங்க அதிபர் காணி எஸ்.முரளிதரன், யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் ரவீந்திரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்