இலங்கை சனநாயக சோசஷிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் தலைமையில் இன்று (2021.02.04) காலை எட்டு மணிக்கு தேசிய கொடி ஏற்றலுடன் மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பமாகியது.
சுதந்திர தின நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், சர்வ மதத் தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி), பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
1    5