4

"எங்களுடைய இளைஞர்களின் சக்தியை மேம்படுத்துவதற்கும், விளையாட்டுத்திறனை வெளிக்கொணர்வதற்கும், ஒழுக்கம் மிக்க நல்லதொரு சமூகமாக உருவாகுவதற்கும் விளையாட்டு நிகழ்வுகள் அவசியம்" என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.இலங்கைத் திருநாட்டின் அதிமேதகு ஜனாதிபதியினுடைய சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழான கிராமிய மற்றும் 

பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்திருக்கின்ற நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் கிராமிய மைதானங்கள் புனரமைக்கின்ற திட்டங்கள் நாடளாவியரீதியில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஆரம்பித்துவைக்கப்பட்தன் பொருட்டு யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விண்மீன் விளையாட்டுக்கழக மைதான அங்குரார்ப்பண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் தலைமையில் இன்று (02.03.2021) காலை 10.30 மணிக்கு வானவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ திரு. அங்கஜன் இராமநாதன், கடற்தொழில் அமைச்சர் கௌரவ திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதி கௌரவ திரு. சிவகுரு பாலகிருஸ்ணன், யாழ். மாநகர சபை முதல்வர் கௌரவ திரு. மணிவண்ணன், மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. எஸ். முரளிதரன், யாழ். மாநகரசபை ஆணையாளர் திரு ஜெயசீலன், பிரதேச செயலாளர் திரு. சா.சுதர்சன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவிமாவட்டச் செயலாளர், விளையாட்டுகழக வீரர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் உரையாற்றுகின்ற போது " எங்களுடைய இளைஞர்களின் சக்தியை மேம்படுத்துவதற்கும் விளையாட்டுத்திறனை வெளிக்கொணர்வதற்கும் ஒழுக்கம் மிக்க நல்லதொரு சமூகமாக உருவாகுவதற்கும் விளையாட்டு நிகழ்வுகள் அவசியமாகும். அத்தோடு ஒரு விளையாட்டு வீரனால் சகல விடயங்களையும் அனுசரித்து செயற்பட முடிவதோடு தலைதாங்கும் பண்பும் தானாகவே உருவாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராமிய மைதானத்தை புனரமைக்கும் செயற்திட்டத்தை இன்று ஆரம்பித்து வைப்பதனை பெருமகிழ்வாக கருதுவதோடு நாடளாவிய ரீதியில் 332 மைதானங்கள் ஒரு மாத காலத்திற்குள் புனரமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு கிராமிய மைதானத்திற்கும் 1.5 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இத் திட்டம் சம காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் அனைத்து விளையாட்டு வீரர்களும் மிகவும் உற்சாகமாக செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். உங்கள் மைதானத்தை புனரமைப்பதற்குரிய உதவிகள் எங்களால் முழுமையாக வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.எனவே ஒழுக்கம் மிக்க சமூகத்தை விளையாட்டுத்துறையின் மூலம் உருவாக்கமுடியும் இதனூடாக நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நிலைப்பாட்டில் இத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றோமென அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

     4   3   2  1