03Jsac1

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலிற்கு அமைவாக சர்வதேச மற்றும் தேசியரீதியான அரசசார்பற்ற அமைப்புக்கள் ஊடாக நாட்டினுள் வேகமாக பரவும் கொவிட் -19 தொற்றுநோய் சூழலிற்கு மத்தியில் பணியாற்றும் கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு சுகாதார பாதுகாப்புப் பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் யாழ். சமூக செயற்பாட்டு மையம் (JSAC) அரச சார்பற்ற நிறுவனத்தினரால் 29.07.2021 அன்று வட்டுக்கோட்டை மற்றும் கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அத்தியாவசிய உலர்உணவுப் பொருட்கள், சுகாதார பாதுகாப்புப் பொருட்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.

 03Jsac1