13Covidprevention

யாழ்ப்பாண மாவட்ட மட்ட COVID-19 தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று (13.08.2021 ) பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்மாவட்ட செயலகத்தில் இணையவழி நிகழ்நிலையில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடலில் COVID-19 தடுப்பு செயலணி மற்றும் மத்திய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கிணங்க COVID-19 தடுப்பு மருந்தேற்றல் தொடர்பான விடயங்கள் , வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்களுக்கான நடைமுறைகள், ஆலயங்கள் மற்றும் பொதுஇடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள், சமூக, கலாச்சார நிகழ்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள்,தொடர்ச்சியான COVID- 19 விழிப்புணர்வு செயற்பாடுகள், அனுமதிபத்திர நடைமுறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் , உதவி மாவட்ட செயலாளர் , மருதங்கேணி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும் பிரதேச செயலாளர்கள், சுகாதார துறைசார் திணைக்கள தலைவர்கள் இணையவழி நிகழ்நிலையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13Covidprevention