15RDAdiscussயாழ் மாநகரத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  இன்றைய தினம் (15.09.2021) மதியம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 
 
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் யாழ் நகர பிரதேசத்தில் அபிவிருத்தி குழுவால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அவற்றிற்கான நிதியீட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்ட வரைபுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
 
திட்ட வரைபுகள், அவற்றை ஊக்குவித்தல் மற்றும் அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக முன்கொண்டு செல்லல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் குறிப்பாக மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி திட்டங்களை செயற்படுத்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.
 
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கௌரவ யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் , மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர், மாநகரசபை ஆணையாளர் மற்றும் குறித்த திட்டங்கள் தொடர்பான துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
 
15RDAdiscuss