9losspay5இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவு இன்றையதினம் (09.10.2021) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவு வழங்கலில் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் திரு.சதாசிவம் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டார். அத்தோடு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர்,உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
 
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கும்போது "பொதுமக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவு, இறந்த மற்றும் காயமுற்ற பயனாளிகளுக்கான கொடுப்பனவு, சேதமடைந்த வணக்கஸ்தலங்களுக்கான கொடுப்பனவு ஆகியன வழங்கிவைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
 
9losspay2  9losspay3  9losspay5
 
9losspay4  9losspay6