கொறோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் 17.03.2020 காலை 8.30மணிக்கு யாழ்மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
- உத்தியோகத்தர்கள் தங்களை தாமே பாதுகாத்து கொள்வதுடன், அவசர தேவைகளின் போது சுழற்சி முறையில் சமூகம் தருதல் வேண்டும் எனவும் பொதுமக்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
- சேவை பெற வரும் பொதுமக்களுக்கென அவசர தேவையின்போது மாத்திரம் விசேட கருமபீடம் செயலக முன்புறத்தில் அமைக்கப் பெற்று செயற்படுத்த உள்ளதாகவும், மாவட்ட செயலகம் மற்றும் தனிப்பட்ட கிளைகள் மற்றும் பிரதேச செயலகங்களது மின்னஞ்சல் முகவரிகளினை அனைவருக்கும் தெரியப்படுத்துவதுடன், தமக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சல்களிற்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
- உத்தியோகத்தர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களை குறிப்பிட்ட காலம் வரையில் ஒத்திவைக்கும்படி அறிவுறுத் துமாறு கேட்கப்பட்டுள்ளது.
COVID-19 Emergency dashboard

|
.
|