மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகு - யாழ்ப்பாணம்


அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைவாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வானிலை எதிர்வு கூறலுக்கு அமைவாக

28 மற்றும் 30 ஆம் திகதிகளில்

100 - 150 mm மழைவீழ்ச்சி கிடைக்க எதிர்பார்ப்பதுடன் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளுவதற்கு ஏற்ற வகையில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று 2019.04.26 ஆம்  திகதி மாவட்ட அனா்த்த முகாமைத்துவ இணைப்பு அலகினால் ஒழுங்குபடுத்தப்பட்ட அவசர ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் முன்னெச்சரிக்கை பரப்புதல், தகவல்களை உறுதிப்படுத்தல், மீனவர்களுக்கான விழிப்பூட்டலை மேற்கொள்ளல், தகவல்கள் தொடர்பாக உறுதிப்படுத்தல், அனர்த்தம் ஏற்படின் அதனை எதிர்கொள்வதற்கான அனர்த்த முகாமைத்துவ உபகுழுக்களின் செயலாற்றுகை பொறுப்பக்கள் போன்ற விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.  அதேவேளை தற்போதைய தாழமுக்க நிலவரம் தொடர்பாக ஒருங்கிணைப்பு பதிலிறுத்தல் நடவடிக்கை, முன்னெச்சரிக்கை பரிமாற்றம் தொடர்பாக யாழ் மாவட்ட அனா்த்த முகாமைத்துவ இணைப்பு அலகின் உதவிப்பணிப்பாளர் அவர்களினால் வெளிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு அவசர நிலைமைகளின் போது தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.


அனா்த்த முகாமைத்துவ நிலையம் - 117
அவசர அம்புலன்ஸ் சேவை - 1990


மேலும்; அனைத்து பிரதேசரீதியான அனர்த்த முகாமைத்துவ குழுக்களுக்கான கலந்துரையாடலினை உடனடியாக மேற்கொண்டு இது தொடர்பாக விழிப்புணர்வுகளை வழங்குமாறு அரசாங்க அதிபரினால் அனைத்து பிரதேச செயலர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன் மீன்வர்களுக்கான முன்னெச்சரிக்கை வழங்குதல், அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட மீன்பிடி திணைக்கள உதவிப்பணிப்பாளர் அவா்களை அரசாங்க அதிபாினால் கேட்டுக்கொள்ளப்பட்டது. இறுதியாக மேற்படி தாழமுக்கம் காரணமாக ஏற்படும் சாத்தியமான பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரினால் அனைத்துப் பங்குதாரா்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

 Lowpresure02