MC
 

மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவமுகாம்.

 மாவட்டச் செயலக நலன்புரிக்கழக ஏற்பாட்டில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் கட்டம் ஒன்று இன்று (30.04.2019) காலை 8.30 மணி முதல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பொது பரிசோதனை, குளுக்கோசு பரிசோதனை, கொலஸ்ரோல் பரிசோதனை, கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
 இவ் மருத்துவ முகாமில் யாழ்ப்பாண சுகாதார அலுவலக வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்களும் அவர்களுடன் STR கண் பரிசோதனை நிலையமும் இணைந்து கண் பரிசோதனையினை மேற்கொண்டனர்