மாவட்ட நல்லிணக்கக் குழுவினை வலுப்படுத்தல்
p1
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தலுக்கு அமைய 02.05.2019 வியாழக்கிழமை பி.ப 3.00 மணிக்கு அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட நல்லிணக்கக் குழு கூட்டம் இடம்பெற்றது. இதில் மதத் தலைவர்கள், பிரதேச செயலர்கள், யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர்இ  பாடசாலை அதிபர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்குபற்றினர்.
 இக்கலந்துரையாடலில் -
  • 21.04.2019 அன்று உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் உயிர்நீத்த உள்நாட்டு, வெளிநாட்டு பிரஜைகளிற்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனையையும், காயமடைந்தவர்களிற்கு குணமடைவதற்கான பிரார்த்தனையும் மேற்கொள்வது என தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய 08.05.2019 புதன்கிழமை அன்று மு.ப 10.00மணிக்கு மாவட்டச் செயலகம், மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகத்திலும், சகல பாடசாலைகளிலும் ஆத்மசாந்தி பிரார்த்தனை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
  • மேலும் மக்களின் மனோநிலையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மத முரண்பாடுகள் ஏற்படுவதனை தடுப்பதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள், மாவட்டத்தினுள் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள், பிரதேச மட்டத்தில் நல்லிணக்கக்குழுவினை வலுப்படுத்தல் மற்றும் கிராம மட்டத்தில் நல்லிணக்கக்குழுவினை வலுப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
p2