யாழ்.  விமான நிலையத்தின் அபிவிருத்தி நிலை.

 யாழ். விமான நிலையத்தின் அபிவிருத்தி நிலையும், முகவர்களின் சேவை வழங்குவதற்கான தயார் நிலை குறித்த கலந்துரையாடல் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் கௌரவ  அர்ஜுனா ரணதுங்கா  அவர்களின் தலைமையில்  05.09.2019 வியாழக்கிழமை மதியம் 2.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கௌரவ வட மாகாண ஆளுநர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா , கௌரவ பாராளுமன்ற  உறுப்பினர் சுமந்திரன், கௌரவ பாராளுமன்ற  உறுப்பினர் சித்தார்த்தன், கௌரவ யாழ் மாநகர மேஜர், எஸ்.பாலசந்திரன்   , அரச  அதிபர், யாழ் மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர்  ( காணி) ,முப்படைகளின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்( தெல்லிப்பளை),மற்றும் கொமாண்டர் ( security force jaffna)   கலந்துகொண்டார்கள்.. 

இவ் விமான நிலையமானது பிராந்திய மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான சுற்றுலாத்துறையையும் , பாரம்பரிய சமூகத்தொடர்புகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.

 60919 1   60919 3
   60919 2