சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி.
யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின்  ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ் மாவட்ட  அலுவலகத்தினால் " சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி" நாளை 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சமுர்த்திப் பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களிற்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சி 17 ஆம் திகதி  ( செவ்வாய்க் கிழமை) மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் க.மகேஸ்வரன் தலைமையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராக  கலந்துகொள்ளவுள்ளார்.