“என்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி" பற்றிய கலந்துரையாடல்.
   

p1250121

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வானது யாழ் மாவட்டச் செயலக வளாக முன்றலில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் காலை 8.50 மணியளவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்கள்  தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பாக ஆரம்பித்து வைத்தார்.

இவ்வருடாந்த சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ,மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்கள், முப்படை அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்  பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட அரச அதிபர் தனது உரையில் “ எமது முன்னோர்கள் இன ஒற்றுமையுடன் செயற்பட்டதனால் நாடு சுதந்திரம் பெற்றதாகவும்,  நாடு சுதந்திரம் பெற பாடுபட்டவர்களை  இந்நாளில் நினைவு கூற வேண்டும் எனவும், சுதந்திரதினம் எமது நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும்,  சமாதானமாகவும் இருப்பதற்கும் நாட்டின் சுபீட்சத்தை அடைவதற்கும், இன மத வேறுபாடின்றி சம உரிமையுள்ளவர்களாக இருக்கின்ற போது சாத்தியமாகும்  எனவும் அந்த வகையில் நாடு சுபீட்சமான எதிர்காலம் அடையவும் பாரிய அபிவிருத்தியை காணவும் இன மத வேறுபாடின்றி ஒரே குடும்பத்தவர் போல சகோதரத்துவமாய் ஒருமித்தவர்களாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் “ எனத் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்வும், யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களின் பாண்ட் இசை மற்றும் மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் தமிழர் பாரம்பரிய நடன நிகழ்வான கோலாட்டம், மயிலாட்டம் என்பனவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி ஆகியோரால் நாக மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

 view more photos....