21-04-2019 திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களை நினைவுகூர்ந்து தேசிய துக்கத்தினமாக 23-04-2019 திகதியை  அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

மேலும் நாளைய தினம் தேசியக் ​கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு காலை  8.30 மணி தொடக்கம் காலை 8.33 மணி வரை மௌன அஞ்சலி செலுத்தி  உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாறு உள்ளக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சு கோரியுள்ளது.

அதற்கமைய மாவட்டச் செயலகத்திலும் மேற்படி அஞ்சலி நிகழ்வு காலை 8.30 மணிக்கு அரசாங்க அதிபர் தலைமையில் செயலக முன்றலில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.