"குழந்தைகளுக்கான மரத்தோட்டம் "- தேசிய மர நடுகை செயற்திட்டம் - 2021

அதிமேதகு ஐனாதிபதியின் சௌபாக்கிய கொள்கையின் அடிப்படையில் “குழந்தைகளுக்கான மரத்தோட்டம்” என்ற தொனிப்பொருளில் தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (15.02.2021) யாழ். நல்லூர் புனித பெனடிக்ற் கத்தோலிக்க பாடசாலையில் நடைபெற்றது. 


இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய குழந்தைகளுக்கான மரத்தோட்டம் -  தேசிய மரநடுகைத் செயற்திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை உணரக்கூடிய தன்மையினையும் மற்றும் நஞ்சற்ற உணவுப்பழக்கத்தை அமுல்படுத்துவதுடன் பழவகைகளை அதிகளவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளதுடன், பாடசாலையில் தரம் ஒன்றில் புதிதாக இணையும் நாளில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வுமாகும் எனத் தெரிவித்ததுடன் தரம் ஒன்றில் புதிதாக இணையும் மாணவர்களிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில்  பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரின் பிரதிநிதியுமான கௌரவ மாநகரசபை உறுப்பினர் திரு. எஸ். சாந்தரூபன்,  மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி ச.கைலேஸ்வரன்,  நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி. எ.அன்ரன் யோகநாயகம், யாழ்.  வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.த.பால்ராஜ், யாழ். வலய ஆரம்ப கல்வி உதவிப் பணிப்பாளர் திரு.  ப.சசிக்குமார் , யாழ். மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு. க.விஸ்வரூபன், விதை மற்றும் நடுகை பொருட்கள் அபிவிருத்தி பிரிவு பிரதிப் பணிப்பாளர் திரு. எஸ். சதீஸ்வரன் , யாழ். புனித. பெனடிக்ற் பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியவசந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

     2   3  1