வட மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளினை வேலைவாய்ப்பினை நோக்கி ஊக்குவிப்பதற்கான செயலமர்வு.


மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம்  ILO நிறுவனத்துடன் இணைந்து வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை வேலைவாய்ப்பினை நோக்கி ஊக்குவிப்பதற்கான செயலமர்வு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (17.02.2021) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்கள்  மாற்றுத் திறனாளிகள் சிலர் சில துறைகளில் அதி திறமையுள்ளவர்களாக காணப்படுகின்றார்கள். இத்தகைய மாற்றுத்திறனாளிகளை இனங்கண்டு தொழில் வாய்ப்பிற்கு வழிகாட்டும் பொறுப்பு மனிதவள அபிவிருத்தி உதவியாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கு உள்ளது. மாற்றுத்திறனாளிகளை தொழில்வாய்ப்பிற்கு வழிகாட்டுகின்றபோது முதலில் உளரீதியாக ஆற்றுப்படுத்துவதோடு தொழில்செய்ய விருப்பமான மாற்றுத் திறனாளிகளை இனங்கண்டு தொழில்நிலையங்களில் இணைத்தல் வேண்டும். தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 9412 மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள் இவர்களில் பலர் ஒரு அவயத்தை மட்டும் இழந்தவர்களாக காணப்படுகிறார்கள் எனவே மாற்றுத்திறனாளிகளை சரியான முறையில் இனங்கண்டு தொழில்வாய்ப்பிற்கு வழிகாட்டுதல் வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இச் செயலமர்வில் திருமதி மேகலா சபேஸ்வரன் (ILO) , திரு. ருக்சன் (கள இணைப்பாளர்), திரு. காண்டீபன் (வளவாளர்), திரு. கலைவேந்தன் (வளவாளர்), திரு. கிறிஸ்ரி(வளவாளர்), செல்வி வாசுகி (வளவாளர்),  மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மனிதவள அபிவிருத்தி உதவியாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்

 

  4  5  6

  

                                      7   8