கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் - யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல்
 
அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டத்தொடர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.மகேசன் அவர்களின் வரவேற்புரையுடன் இன்று (17.03.2021) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

குறித்த தேசிய நிகழ்ச்சித் திட்ட கலந்துரையாடலில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ திரு.மகிந்தானந்த அளுத்கமகே, கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான கௌரவ திரு.கே.என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சாள்ஸ்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான கௌரவ திரு.அங்கஜன் இராமநாதன், அமைச்சின் செயலாளர்கள், கௌரவ தவிசாளர்கள், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), ஆளுநரின் இணைப்புச் செயலாளர், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொலிஸார், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

 
                   14       12