மாவட்ட செயலகம் - யாழ்ப்பாணம்
Nallur Temple

Events

 No events

News

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் - யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல்

18 மார்ச் 2021

  அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டத்தொடர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.மகேசன் அவர்களின் வரவேற்புரையுடன் இன்று (17.03.2021) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

"சர்வதேச மகளிர் தினம் மற்றும் யாழ். மாவட்ட பெண்கள் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருள் கண்காட்சியும் விற்பனையும்" நிகழ்வு

09 மார்ச் 2021

"மகளிர் ஒவ்வொருவரும் தமது உரிமைகளை போராடித்தான் பெற்று வந்துள்ளார்கள். இந்தப் போராட்டம் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை" என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விண்மீன் விளையாட்டுக்கழக மைதான அங்குரார்ப்பண நிகழ்வு

02 மார்ச் 2021

"எங்களுடைய இளைஞர்களின் சக்தியை மேம்படுத்துவதற்கும், விளையாட்டுத்திறனை வெளிக்கொணர்வதற்கும், ஒழுக்கம் மிக்க நல்லதொரு சமூகமாக உருவாகுவதற்கும் விளையாட்டு நிகழ்வுகள் அவசியம்" என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பான கலந்துரையாடல்

19 பிப்ரவரி 2021

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் 06.02.2021  அன்று  காலை 9மணிக்கு கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வட மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளினை வேலைவாய்ப்பினை நோக்கி ஊக்குவிப்பதற்கான செயலமர்வு.

17 பிப்ரவரி 2021

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம்  ILO நிறுவனத்துடன் இணைந்து வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை வேலைவாய்ப்பினை நோக்கி ஊக்குவிப்பதற்கான செயலமர்வு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (17.02.2021) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

"குழந்தைகளுக்கான மரத்தோட்டம் "- தேசிய மர நடுகை செயற்திட்டம் - 2021

17 பிப்ரவரி 2021

அதிமேதகு ஐனாதிபதியின் சௌபாக்கிய கொள்கையின் அடிப்படையில் “குழந்தைகளுக்கான மரத்தோட்டம்” என்ற தொனிப்பொருளில் தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (15.02.2021) யாழ். நல்லூர் புனித பெனடிக்ற் கத்தோலிக்க பாடசாலையில் நடைபெற்றது. 

1st Quarter AMC Meeting on 11.02.2021

12 பிப்ரவரி 2021

First Quarter Meeting of the Audit & Management Committee for the year 2021 was held on 11.02.2021 at 10.30 p.m under the chairmanship of the Government Agent, Jaffna District at District Secretariat’s Auditorium. 

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்க்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு .

09 பிப்ரவரி 2021

நிதியமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் குழந்தைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட மாணவர்களில் கடந்த ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 40 மாணவர்களுக்கு

இலங்கை சனநாயக சோசஷிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தின விழா

09 பிப்ரவரி 2021

இலங்கை சனநாயக சோசஷிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் தலைமையில் இன்று (2021.02.04) காலை எட்டு மணிக்கு தேசிய கொடி ஏற்றலுடன் மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பமாகியது.

Covid 19 தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடல்

08 ஜனவரி 2021

Covid 19 தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் (07.01.2021 ) அன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார ,

« »