78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2026
சுற்றுலா வழிகாட்டி நூல்
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2026
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2026
தேசிய உற்பத்தித்திறன் விருது – அதிமேதகு ஜனாதிபதியிடமிருந்து முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்

දිසාපති / දිස්ත්‍රික් ලේකම්

GA Piiratheepan

  

මහතා එම්. පීරතීපන්

ශ්‍රී ලංකා පරිපාලන සේවයේ විශේෂ ශ්‍රේණිය I

 

 

 

 

2தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (08.11.2026) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கான முதலாம் இடத்திற்குரிய விருதினை அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் வழங்கி வைத்தார். இதன்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்களும் உடனிருந்தார். மேலும், இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் அரசாங்க அதிபருடன் இணைந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்தச் சாதனையானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறந்த தலைமைத்துவம், ஒருங்கிணைந்த முயற்சி, அர்ப்பணிப்பான உழைப்பு மற்றும் மக்களுக்கான சிறந்த சேவை வழங்கலுக்குக் கிடைத்துள்ள தேசிய அங்கீகாரமாகும்.


Readmore


 

පුවත් සහ සිදුවීම්

News

புதிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆளுமை விருத்திப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 37 பேருக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

නොවැම්බර් 22 2026

2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் புதிதாக முகாமைத்துவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்ட ஆளுமை விருத்திப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, இன்றைய தினம் (20.11.2026) நண்பகல் 12.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பயிற்சி நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 37 முகாமைத்துவ...

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் 75 புதிய வீடுகள் நிர்மாணிப்பு நிறைவு – சாவகச்சேரியில் பயனாளி ஒருவருக்கு வீடு உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு

නොවැම්බර් 22 2026

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சொந்தமாக ஒரு இடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடளாவிய ரீதியில் 2,000 வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவின் இயற்றாலை வரணி கிராமத்தில்...

நூறு ஆண்டுகளைக் கடந்து ஊடகப் பணியாற்றும் லேக் ஹவுஸ் நிறுவனம் பெருமைக்குரியது – யாழ். அரசாங்க அதிபர்

නොවැම්බර් 22 2026

இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் (Associated Newspapers of Ceylon Limited – Lake House) தனது 100ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், யாழ்ப்பாணக் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வொன்று இன்று (20.11.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளான ஸ்ரீ சங்கரன் ராஜகோபாலன், ஸ்ரீ...

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான வடக்கு மாகாண பங்குதாரர் பயிற்சிப்பட்டறை

නොවැම්බර් 22 2026

இலங்கையில் குடும்பம் சார்ந்த மாற்றுப் பராமரிப்பு முறையை வலுப்படுத்துவதையும், சிறுவர் பராமரிப்பு முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான வடக்கு மாகாண பங்குதாரர் பயிற்சிப்பட்டறை இன்று (20.11.2026) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. வரவேற்புரை : நிகழ்வில் வரவேற்புரையையும் பயிற்சிப்பட்டறையின் நோக்கம் மற்றும் அறிமுகத்தையும் SOS Children's Villages Sri Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. எஸ். பத்மராஜா வழங்கினார். நோக்கம் :...

யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

නොවැම්බර් 20 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (19.11.2026) பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. மேலும், ஒவ்வொரு பிரதேச செயலாளரும் தமது பிரதேச செயலகப் பிரிவில்...

யாழ். மாவட்ட செயலகத்தின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

නොවැම්බර් 20 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான நான்காம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (19.11.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், உள்ளகக் கணக்காய்வில் காணப்படும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து திருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்தல்களை முறையாகப் பேணாமையே கணக்காய்வு...

அனர்த்த முகாமைத்துவத்தில் சர்வமத மற்றும் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அவசியம் – யாழ். அரசாங்க அதிபர்

නොවැම්බර් 20 2026

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண மற்றும் மீட்புப் பணிகள், டித்வா சூறாவளிக்குப் பின்னரான மக்களின் மீட்பு நடவடிக்கைகள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணங்கள் மற்றும் நலன்புரிச் சேவைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமத உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் (18.11.2026) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. நோக்கம் : அரசாங்கத்தினால்...

நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமனம்

නොවැම්බර් 18 2026

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான 2025ஆம் ஆண்டுக்கான திறமை அடிப்படையிலான மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 9 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவை நிலைய நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் (17.11.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார அறிவையும் முகாமைத்துவத் திறனையும் மேம்படுத்த நான்கு நாள் பயிற்சிச் செயலமர்வு ஆரம்பம்

නොවැම්බර් 18 2026

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டம் தயாரித்தல் தொடர்பான நான்கு நாட்களைக் கொண்ட பயிற்சிச் செயலமர்வு சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். சசீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.11.2026) காலை 9.30 மணிக்கு சர்வோதய நிலையத்தில் ஆரம்பமானது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...

பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்

නොවැම්බර් 18 2026

பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்குத் துரிதமான பதிலளிப்பு மற்றும் தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்குதாரர்களுடனான மாவட்ட மட்டக் கலந்துரையாடல், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.11.2026) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதேச மட்டங்களில் அடையாளம் காணப்பட்டு, உரிய மட்டங்களில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான அணுகுமுறைகள்...

« »

Related Links

==> Requesting copies of Birth, Marriage and Death certificates Online
==> Vehicle Revenue Licence Service  Online
==> Bus Seat Booking Online
==>
Train Seat Booking Online

 

යාපනය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය - දුරකථන නාමාවලිය
☎

යාපනය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය

දුරකථන නාමාවලිය

08

District Director (Agriculture)

දිස්ත්‍රික් කෘෂිකර්ම අධ්‍යක්ෂ
☎ දුරකථන: 021 221 9993
▤ ෆැක්ස්: —
විද්‍යුත් තැපෑල: —
15

Mr.E.Saseelan

මැතිවරණ නියෝජ්‍ය කොමසාරිස්
☎ දුරකථන: 0212222655
▤ ෆැක්ස්: 0212228002
විද්‍යුත් තැපෑල: —

දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ කාර්ය මණ්ඩලය

දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ කාර්ය මණ්ඩල පැතිකඩ
02 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 02
03 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 03
04 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 04
05 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 05
06 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 06
07 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 07
08 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 08
09 Blue Modern Business ID Card
10 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 09
11 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 12
12 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 10
13 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 11
14 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 13
15 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 14
16 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 15
17 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 16
18 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 17
19 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 19
20 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 20
21 021
22 දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල කාර්ය මණ්ඩලය 22