දිසාපති / දිස්ත්රික් ලේකම්

මහතා එම්. පීරතීපන්
ශ්රී ලංකා පරිපාලන සේවයේ විශේෂ ශ්රේණිය I
உடுவில் பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா 20.11.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஏழாலை முத்தமிழ் மன்ற மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. உடுவில் பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்ஷன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி மாலினி கிருஸ்ணானந்தன் அவர்களும், நாடகக் கலைஞரும் கலைக்குரிசில் விருது பெற்றவருமான திரு ந. பரமேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர். இசைக்கலைஞர் கலாபூஷணம் தம்பு சற்குருநாதன் அவர்களின் கலைப்பணிகளை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் தொடங்கியதுடன், உடுவில் அயோத்தியா கலைமன்றத்தினரின் தமிழ்த்தாய் வாழ்த்தும், இணுவையூர் திரு கோ. இரத்தினகுமார் குழுவினரின் மங்கல இசையும் இடம்பெற்றன. தொடர்ந்து ஞானஏந்தல் இரத்தினம் இராஜேஸ்வரன் அவர்கள் அரங்கத்திறப்புரையையும், உடுவில் உதவிப் பிரதேச செயலாளர் திரு ஜெ. றெமின்ரன் அவர்கள் வரவேற்புரையையும் நிகழ்த்தினர் |














