மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (08.08.2024) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கடந்தகால கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களப் பணிப்பாளர் திரு. சுனில் ஜெயசேகர அவர்கள் நிகழ்நிலை தொழில்நுட்பம் (Zoom) ஊடாக கலந்துகொண் டார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) , சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம், கணக்காய்வாளர் அத்தியட்சகர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5