யாழ்.மாவட்ட  அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின்  தலைமையில் "பொங்கல் பண்டிகை" இன்று  (16.01.2020) காலை 8 மணிக்கு மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்றது.
pongal GA pongal DP pongal Thevaram

யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஆரம்பகட்ட செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், வணபிதா ஜெபரட்ணம் அடிகளார், யாழ் இந்திய துணைத்தூதரக அதிகாரி எம்.கிருஷ்ணமூர்த்தி, கடற்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பங்குனி மாதம் ஏழாம் திகதி நடைபெறவுள்ளது. இவ் உற்சவத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

உற்சவத்திற்கு முதல் நாள் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து குறிகட்டுவான் வரை அதிகாலை ஐந்து மணி தொடக்கம் பதினொரு மணி வரையும், குறிகட்டுவானிலிருந்து காலை ஆறுமணி தொடக்கம் மதியம் பன்னிரண்டு மணி வரை படகுகள் மூலம் கச்சத்தீவிற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வடபிராந்திய கடற்படையினரால் நீர் விநியோகம், மின்சாரம் மற்றும் உணவு வசதிகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன. உற்சவத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 9000 பக்தர்கள் வருகை தருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. உற்சவகாலத்தின் போது பொலித்தீன் பாவனைகளை கட்டுப்படுத்த சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபை ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டுமென அரசாங்க அதிபர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

07 01 20 07 01

"முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக் கொள்வோம்" எனும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் "தேசிய பாதுகாப்பு தினம்" இன்று (2019.12.26) காலை 9.15 க்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமியால் 2004.12.26 ஆம் திகதி உயிரிழந்த மக்களிற்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. இப் பிரார்த்தனையில் மதகுருமார்கள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி),பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

 
1 Tsunami  3Tsunami

   
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  2020 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு தேசியக் கொடி ஏற்றலுடன் காலை 9.30 (புதன் கிழமை) மணிக்கு ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் "வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்" என்னும் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்ச தொலைநோக்கத்தின் கீழ் மாவட்ட செயலகத்தில்  மரங்கள் நடுகின்ற நிகழ்வு நடைபெற்றதோடு மாவட்ட செயலக  அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்கள்.
 
மேலும் அரசாங்க  அதிபர் " 2020 ஆம் ஆண்டில் யாழ்.மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றவும்  மக்களிற்கு விரைவாக வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்குவதோடு. அனைத்து மக்களிற்கும் உத்தியோகத்தர்களிற்கும் புதுவருடம் மகிழ்ச்சியாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று  புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் ( காணி)  பிரதம கணக்காளர்,  திட்டமிடல் பணிப்பாளர்,  சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும்  கலந்துகொண்டார்கள்.
 GA 3 GA 4
 GA 2
 

 

award 1

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற லக் ரெக்கிய ஹரசர தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திணைக்களத்தின் பிரதான இலக்கான மனிதவளத்தினை வினைத்திறன் வாய்ந்ததாக முதலிடும் வகையில் செயலாற்றிய 25 மாவட்டங்களிற்குமான தொழில் நிலையங்களிற்கான தரப்படுத்தலில் யாழ்ப்பாண மாவட்ட தொழில் நிலையம் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கவிருதினை வென்றுள்ளது.

தேசிய ரீதியில், மாவட்ட ரீதியாக கடமையாற்றும் அனைத்து மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களினதும் கடமைகளின் அளவு, பொறுப்புக்கள், ஆளிடைத்தொடர்புகள், தலைமைத்துவம் உட்பட தொழில்களின் செயலாற்றல்கள் மற்றும் அவற்றின் பலன்களாகிய சேவைகளின் அளவுகள் போன்றவற்றின் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இவ்விருதிற்கான மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

அந்தவகையில் 23.12.2019 ஆம் திகதி சுகுருபாய பத்தரமுல்லையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் கௌரவ டினேஸ் குணவர்தன அவர்களால் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் தங்க விருதினை யாழ்ப்பாண மாவட்டமும் வெள்ளி விருதினை குருணாகல் மாவட்டமும் வெண்கல விருதினை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்ற அதேவேளை சுயதொழில் முயற்சியாளர்களிற்கான விருதுகளும் அதிகளவான வேலைவாய்பினை வழங்கிய நிறுவனங்களிற்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.award cer 2

award3