அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (பட்டதாரிப் பயிலுநர்) வேலையற்ற பட்டதாரிகள் நியமனம்.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நாடளாவியரீதியில் 16800 வேலையற்ற  பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பட்டதாரிப் பயிலுநர்களாக பயிற்சியளிப்பதற்கான செயற்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 01.08.2019 (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வீரசிங்க மண்டபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

யாழ் மாவட்டத்தில்   1253 வேலையற்ற பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் (பட்டதாரிப் பயிலுநர்) நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். ஆயினும் 934 வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந் நியமனங்கள் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,  பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், அசாங்க அதிபர் நா.வேதநாயகன் ஆகியோரினால் வழங்கப்பட்டன.
 10819 1
 10819 210819 3