சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் இ சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் “சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை” 25.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) மு.ப 8.30 – பி.ப 3.30 வரை தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் யாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

 260819 1.1260819 2.2
 260819 3.3