முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான 2025ஆம் ஆண்டுக்கான திறமை அடிப்படையிலான மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 9 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவை நிலைய நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் (17.11.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் 11.11.2026 திகதியிடப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இந்நியமன நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய, திறமை அடிப்படையிலான பரீட்சையில் சித்தியடைந்து தெரிவு செய்யப்பட்ட ஏழு உத்தியோகத்தர்களும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் புதிய சேவை நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள்:
* திரு. மரியான் அன்ரன் ஜேசுதாஸ் – காரைநகர் பிரதேச செயலகம்.
* திருமதி. தர்ஷினி கிருஷ்ணகுமார் – கரவெட்டி பிரதேச செயலகம்.
* திருமதி. நேசபவாணி தியாகச்சந்திரன் – தெல்லிப்பழை பிரதேச செயலகம்.
* திரு. திருநாவுக்கரசு கலைச்செல்வன் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்.
* திருமதி. சிவகெளரி இந்திரஜித் – யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்.
* திரு. இராஜசேகரம் அசோகன் – வேலணை பிரதேச செயலகம்.
* திரு. அம்பலம் பாலஸ்கரன் – நெடுந்தீவு பிரதேச செயலகம்.
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள்:
* திரு. கிருஷ்ணராசா உதயராஜ் – ஊர்காவற்றுறை பிரதேச செயலகம்.
* செல்வி. பாலசிங்கம் ஜனனி – நல்லூர் பிரதேச செயலகம்.
 
1 2 3 4 5 6 7 8 9 10