யாழ் மாவட்ட  அலுவலகத்தில் " சமுர்த்தி சௌபாக்கியா" வர்த்தகக் கண்காட்சி

யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின்  ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ் மாவட்ட  அலுவலகத்தினால் " சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி" இன்று      17-09-2019 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு யாழ் மாவட்ட  அரசாங்க  அதிபரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக மற்றும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்

சமுர்த்திப் பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களிற்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக 17,18ஆம் திகதிகளில்  காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறுகின்றது.

 170919 11  170919 22  170919 33