திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் தொடர்பான பயிற்சிநெறியும், சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும்...!

    

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண  அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தில்  நூறு பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பொருத்துதல் நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக பாடசாலை  அதிபர், ஆசிரியர்களிற்கு திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் பயிற்சி நெறி 09-10-2019 தொடக்கம்  11-10-2019 வரை   மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .

 இப்பயிற்சியின் இறுதி நாள் (11.10.2019)  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.கனகேஸ்வரன் அவர்களின்  தலைமையில் நடைபெற்றதோடு இந் நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்  திரு. வீ. சிவஞானசோதி, வட மாகாண கல்வி  அமைச்சின் செயலாளர் திரு. இ. இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும்  மேலதிக அரசாங்க  அதிபர்  ( காணி), உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  (தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற  அமைச்சு), உதவிக் கல்விப் பணிப்பாளர்  ( வட மாகாண கல்வியமைச்சு), பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும்  கலந்துகொண்டார்கள்.   
    141019 1

    

141019 2141019 3