யாழ் மாவட்ட  பாடசாலைகளில் அமைக்கப்பட்ட   " திறன் வகுப்பறைகள்"

 தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும்  இளைஞர் அலுவல்கள்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாவட்ட  பாடசாலைகளில் அமைக்கப்பட்ட   " திறன் வகுப்பறைகள்" 06.11.2019 ( புதன்கிழமை ) அன்று யா.நெடுந்தீவு மகா வித்தியாலயம், யா.நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை, நெடுந்தீவு மங்கயகரசி வித்தியாலயம் மற்றும் யா. நெடுந்தீவு சிவப்பிரகாச வித்தியாலயம்  ஆகிய பாடசாலைகளில்  தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சின்  செயலாளர் வீ.சிவஞான சோதி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 
   

    இந் நிகழ்வில் யாழ்.  மாவட்ட செயலக   அரசாங்க அதிபர், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்  ( காணி), நெடுந்தீவு  பிரதேச செயலர், கோட்டக் கல்வி அலுவலர் மற்றும்  அரச  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

 

    081119 1081119 2
    081119 3081119 4