யாழ்.மாவட்ட செயலகத்தில் "மாவட்ட  ஒருங்கிணைப்பு முன்னாயத்த கூட்டம்" 23.12.2019 (திங்கட்கிழமை) காலை பத்து மணிக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்றம் தொடர்பாக கலைந்துரையாடப்பட்டது. மேலும்  கல்வி , நீர் விநியோகம், போக்குவரத்து, வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், மின் விநியோகம், நகர  அபிவிருத்தி அதிகார சபை மற்றும்  உள்ளூராட்சி சபைகள், வர்த்தகம், தொழிற்துறை வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கௌரவ தவிசாளர்கள், யாழ். மாவட்ட செயலக  அரசாங்க  அதிபர், மேலதிக அரசாங்க  அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள்  கலந்துகொண்டார்கள்.

 1 Dec23  
   2 Dec23