யாழ். மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிகழ்கின்ற செயற்பாடுகளை  கட்டுப்படுத்தல்   தொடர்பான கலந்துரையாடல் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (24.12.2019)  காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில்  நடைபெற்றது.

சட்டவிரோதமான மணல்  அகழ்வு, வாள்வெட்டு குழுக்களின் அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் பாவனை  தொடர்பாக  ஆராய்ந்து இவற்றை  கட்டுப்படுத்தல் இக் கலந்துரையாடலின்  நோக்கமென கௌரவ  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட  பிரதிப் பொலிஸ்மா அதிகாரி,  மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்  ( காணி) , பிரதேச செயலாளர்கள், சட்டத்தரணிகள்  மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

1 meeting 24
2 meeting 24 3 meeting 24