யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஆரம்பகட்ட செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், வணபிதா ஜெபரட்ணம் அடிகளார், யாழ் இந்திய துணைத்தூதரக அதிகாரி எம்.கிருஷ்ணமூர்த்தி, கடற்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பங்குனி மாதம் ஏழாம் திகதி நடைபெறவுள்ளது. இவ் உற்சவத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

உற்சவத்திற்கு முதல் நாள் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து குறிகட்டுவான் வரை அதிகாலை ஐந்து மணி தொடக்கம் பதினொரு மணி வரையும், குறிகட்டுவானிலிருந்து காலை ஆறுமணி தொடக்கம் மதியம் பன்னிரண்டு மணி வரை படகுகள் மூலம் கச்சத்தீவிற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வடபிராந்திய கடற்படையினரால் நீர் விநியோகம், மின்சாரம் மற்றும் உணவு வசதிகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன. உற்சவத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 9000 பக்தர்கள் வருகை தருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. உற்சவகாலத்தின் போது பொலித்தீன் பாவனைகளை கட்டுப்படுத்த சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபை ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டுமென அரசாங்க அதிபர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

07 01 20 07 01