யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக்கழகத்தினால் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்புக்களும் தலைவர் திருமதி எஸ். நிக்கொலஸ்பிள்ளை அவர்களின் தலைமையில் 25.01.2020 (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களும்

சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டதோடு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.

வருடாந்த ஒன்று கூடல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கும் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களிற்கும் கௌரவிப்புக்கள் நடைபெற்றதோடு கடந்த வருடம் நலன்புரிச் செயற்பாடுகள் மற்றும் உற்பத்தித்திறன் செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களிற்கும் ஓய்வு பெற்ற, இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சேவையில் வெள்ளிவிழாவினை பூர்த்தி செய்தவர்களிற்கும் கௌரவிப்பு நடைபெற்றது.மேலும் நடனம், கவிதை, பாடல்கள், நாடகம் ஆகிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

11GA 3 GA prize for university entrance
2 AGA lighting DP speech