அதி மேதகு சனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்களினுடையதும், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினுடையதும் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களின் செயற்பாட்டில் 2020.02.04 ஆம் திகதின்று 72ஆவது தேசிய தினவிழா சுதந்திர

சதுக்கத்தில் மிகவும் பெருமையுடன் கொண்டாடுவதற்கு நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
72ஆவது தேசிய தினவிழாவினை அனைத்து மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளில் மரநடுகை நிகழ்ச்சி த்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நாட்டுவதற்கும் மற்றும் சிரமதானப்பணியில் ஈடுபடுவதற்கும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது.இது தொடர்பான கடிதம் யாழ் மாவட்ட சகல பிரதேச செயலாளர்களிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்படவாறு நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறும் மரநடுகை நிகழ்வு மற்றும் சிரமதானப் பணிகள் தொடர்பான புகைப்படங்களை அமைச்சின் கோரிக்கைக்கு அமைய 2020.02.05 ம் திகதிக்கு முன்பாக அனுப்பிவைப்பதற்கு மாவடட செயலக திட்டமிடல் கிளையின் மின்னஞ்சல் முகவரிக்கு (email:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) மென்பிரதியாக காலதாமதமின்றி கிடைக்கச்செய்யுமாறும் யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்கள் கோரியுள்ளார்.

 

72nd Independance day-2020