அரச உத்தியோகத்தர்களிற்கான ( 40 வயதிற்கு மேற்பட்டோர்) தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் 5.11.2019, 6.11.2019 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது.

இப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி பங்குபற்றி அரை இறுதியில் கம்பஹா பொலிஸ் அணியுடன் விளையாடி 13:12 என்னும் புள்ளிகளை பெற்று வெற்றியீட்டியதோடு இறுதிப்போட்டிக்கு தெரிவாகி

களுத்துறை அணியுடனான போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

வலைப்பந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டிய யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட அணியினரிற்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் 21.01.2020 ஆம் திகதி நடைபெற்றது.

 1.GA 
 Group  2.adl GA