யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. வரவேற்புரையை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் அவர்கள் நிகழ்த்தினார்.இக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் அனுமதிக்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மாவட்ட செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், கிராமசக்தி, வீடமைப்பு, மீள் குடியேற்ற வேலைத் திட்டங்கள், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய துறைவாரியாக விரிவாக ஆராயப்பட்டன.
தொடர்ந்து விவசாய அபிவிருத்தி, உட்கட்டுமான அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் (கொரோனா வைரஸ் ), வர்த்தகம், கூட்டுறவு துறைகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. இங்கு சிற்றூழியர் ஆளணி பற்றாக்குறை, மண் அகழ்வு பிரச்சினை, திண்மகழிவகற்றல் பிரச்சனை, வீட்டுத்திட்ட கொடுப்பனவு தொடர்பான பிரச்சினை, கட்டாகாலி விலங்குகள் தொடர்பான பிரச்சினை, கடலரிப்பு, சுன்னாகம் நிலத்தடி நீர்ப் பிரச்சினை போன்றவை தொடர்பாக துறைவாரியான விரிவாக கருத்து தெரிவிக்கப்பட்டு, உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
தொடர்ந்து நன்றியுரையுடன் மாலை 3 மணியளவில் கூட்டம் நிறைவுபெற்றது.
 GA speech auditorium 
 GA Addl.GA  GA room