யாழ். மாவட்ட சாரணர் சங்கத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 11.02.2020 (செவ்வாய்க்கிழமை) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட சாரண ஆணையாளர், தவகோபால், மற்றும் சாரணர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ். மாவட்ட சாரணர் சங்க நிறைவேற்று அதிகார சபையின் - 2020 ஆண்டுக்கான உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதில் கடந்த காலத்தில் யாழ். மாவட்ட சாரணர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட சாரணர் ஆணையாளர் அவர்கள் எடுத்துரைத்தார். அத்துடன் பிளாஸ்டிக்கர், பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தி அதற்கு மாற்றீடா பொருட்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை தொடர்பாக சாரணர் சங்கத்தால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து " யாழ் சாரணன்" மாதாந்த சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.

 4 1 
 2  3