கறைபடியாத கரங்களுடன் மக்களுக்கு உயர்ந்த அரச சேவையாற்றிய ஏழைகளின் நாயகன், மக்கள் சேவகன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பிரிவுபசார நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (2020.02.14) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தம்பதியினர் கலந்து கொண்டிருந்தனர். 2015 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய அரசாங்க அதிபருக்கு கௌரவிப்பு நிகழ்வுகளும், வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றன. யாழ் மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

wishes 1.1.Addl GA 2.Addl land 4.maalai        
 6.1  7.Mr Mrs. Ga  AO  Ds officers