யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபராக உயர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இன்று 17.02.2020 (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் மதகுருமார்களின் ஆசிச் செய்தியுடன் வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானதோடு இந்நிகழ்வில் அரசாங்க அதிபரின் பாரியார் திருமதி. வனிதா மகேசன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,உத்தியோகத்தர்கள்,நலன்விரும்பிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டிருந்தார்கள். யாழ்.மாவட்ட செயலக புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் 1985- 1989 ஆண்டு யாழ். பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாக தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு பின்னர் சர்வதேச உறவுகளுக்கான பட்டப்படிப்பின் டிப்ளோமா மற்றும் ஜனாதிபதி புலமைப்பரிசில் தாய்லாந்து ஆசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தையும் (MBA) பெற்றார். 1991 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் திறந்த போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் 1992 - 2004 ஆகிய காலப்பகுதியில் வாழைச்சேனை, வவுணதீவு, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றியதோடு 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்று 2008 ஆம் ஆண்டு வரை தனது கடமைகளை செவ்வனவே ஆற்றியுள்ளார். தொடர்ச்சியாக வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளராகவும் அப்பதவிக்கு மேலதிகமாக நைரோபி நாட்டின் இலங்கை தூதுவராலயத்தின் Minister Counsellor ஆகவும் கடமையாற்றிய அதேவேளை இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2011- 2015 வரை இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், 2015- 2019 ஆகிய காலப்பகுதியில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் அத்தோடு உலக உணவுத் திட்ட திட்டப்பணிப்பாளராகவும், நிதி பொருளாதார கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பலதுறைகளிலும் மக்களுக்கு உயர்ந்த சேவையாற்றிய புதிய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அனைத்து உத்தியோகத்தர்களினதும் ஒத்துழைப்புடன் தனது மக்களுக்கான சேவையை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தனது உரையில் பொது மக்களின் வரிப்பணத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களாகிய நாம் அவர்களுக்கு விரைவாகவும் நேர்த்தியாகவும் சேவைகளை ஆற்றவேண்டுமென்றும் சேவையைப் பெறும்பொருட்டு வரும் எந்த ஒரு பொதுமகனும் திருப்திகரமாகச் செல்லவேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

1.Addl GA  2.walk   3.GA room assume      
5.light AGA audiance