கல்வியெனும் அபிவிருத்தி இலக்கு நோக்கி தொலைதூரம் பயணித்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மலையகத்தினைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கௌரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பங்குபற்றுதலுடனும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களது தலைமையிலும் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  21.02.2020 அன்று மதியம் 12.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்(அபிவிருத்தி) திரு.கே. விமலநாதன், மேலதிக செயலாளர்(அபிவிருத்தி) திரு.பா.செந்தில்நந்தனன், பணிப்பாளர்(அபிவிருத்தி) திரு.வே.பிறேமச்சந்திரன், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) திரு.முரளீதரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.