PEACE ( எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாப்போம்) அமைப்பினால் " சிறுவர் நேரலை ( online) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு"  செயலமர்வு 25.02.2020 அன்று காலை 9 மணிமுதல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சிறுவர்கள் இணையதளங்களில் எதிர்நோக்கும் பாலியல் ரீதியான சுரண்டல் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக 22, 23, 24, 25ஆம் திகதிவரை செயலமர்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் PEACE நிறுவன செயற்திட்ட உத்தியோகத்தர்கள் சட்டத்தரணி திரு. ரெயான் நடேசராஜா, செல்வி. ஆன் பிகிறாடோ, செல்வி. ரமா மற்றும் மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு இணைப்பாளர் திரு. க.மனோகரன் ஆகியோர் வளவாளராக கலந்துகொண்டதோடு சிறுவர்களின் பெற்றோர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

 1    2