நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக விடுக்கப்பட்ட அறிவித்தலை தொடர்ந்துயாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல்  இன்று காலை (13.3.2020) யாழ்மாவட்ட செயலக அரசாங்க அதிபர் செயலகத்தில் இடம்பெற்றது. 

இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் உயர் திரு கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள், கொரோனா வைரஸ் தாக்கம் உலகளாவிய ரீதியாக அதிகரித்த நிலையில் இலங்கையும் அது தொடர்பாக பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஒவ்வொரு மாவட்ட செயலகங்கள் ஊடாகவும் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இருப்பினும் இரு நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமையால் பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் முன்னேற்பாட்டு நடவடிக்கையாகவே பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்த ஒரு பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை அதையும் மீறி பதுக்கலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் மக்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அதிகளவானபொருட்களைகொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு மொத்த வியாபாரிகள் பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இது தேவையில்லாத ஒரு விடயம் கொழும்பிலிருந்து பொருட்கள் வழமைபோன்று யாழிற்கு எடுத்துவரப்பட்டு கொண்டிருக்கின்றன அதைவிட நான் தற்பொழுது கூட்டுறவு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளேன் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை தாராளமாக வழங்குமாறு எந்தவித பிரச்சனையும் இல்லாது மக்களுக்கு விநியோகிக்குமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கட்டளை விடுத்துள்ளேன் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளை உடனடியாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன் எனவே பொதுமக்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு எரிபொருள் தட்டுப்பாடு என்று அச்சமடையத் தேவையில்லை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான சகல பொருட்களும் கொழும்பிலிருந்து வழமைபோல் கொண்டுவரப்படும். இது தொடர்பாக எமது கௌரவ ஆளுநர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறு ஒரு பிரச்சனை ஏற்படுமிடத்து அதிகாரிகளினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்தார் .