அரசாங்கத்தினால் யாழ் மாவட்டத்திற்கான ஊரடங்குச்சட்ட உத்தரவானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான தேவைகள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகள் பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 உள்ளுர் மட்டத்தில் சில்லறை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை நடமாடும் சேவை மூலம் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதுடன் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் நபர்களுக்கான அனுமதியும் பிரதேச செயலாளர் மட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.

நடமாடும் சேவை மூலம் விற்பனைசெய்யும் விற்பனையாளர்கள் குறிப்பிட்ட பொருட்களை பொதிகளாக்கி குறிப்பி;ட்ட பெறுமதியில் வாகனங்களில் கொண்டுசென்று விற்பனை செய்யமுடியும்.

 மேலும் மரக்கறி மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் அவற்றை விற்பனை செய்வதற்கும், உரிய பிரதேச செயலகம் மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட விற்பனை செயற்பாடுகளில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் நபர்களுக்கான அனுமதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

 மரக்கறிப் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்வது ஊக்குவிக்கப்படுகின்றது

 நடமாடும் சேவைகள் மூலம் விற்பனைகளில் ஈடுபடும் அனைத்து விற்பனைகளுக்கான அனுமதியானது வியாபாரிகளுக்கு அனுமதி பத்திரத்தில் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட பிரதேச செயலக மற்றும் குறிப்பிட்ட கிராம எல்லைகளுக்கு உட்பட்டு மாத்திரம் விற்பனை செய்தல் கட்டாயமாகும்.

 மேற்படி ஏற்பாடானது தேவையினை கருத்திற்கொண்டு சுழற்சிமுறையில் அனைத்து வியாபாரிகளுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கும் வகையில் பிரதேச செயலாளரினால் ஏற்பாடு செய்யப்படும். மேற்படி வியாபார நடவடிக்கைகள் காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை மேற்கொள்ளப்படலாம்.


 ஊரடங்கு நேரத்தில் மருந்தகங்கள் திறந்திருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டள்ளது. அத்துடன் மருத்துவ குறிப்பேடு மற்றும் கிளினிக் கொப்பிகளுடன் சென்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

 சில்லறை வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் கொள்வனவு செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு வாகன மற்றும் பணியாளர்களுக்கான அனுமதிகள் பிரதேச செயலாளர் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  ஊரடங்கு நேரத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மீன் விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மாறாக ஒழுங்காக அவற்றை வியாபாரிகள் வீதிகளில் கொண்டுசென்று விற்பனை செய்வதற்று அனுமதியளிக்கப்படுகின்றது. மீன்பிடி செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தமது மீன்களை விற்பனை செய்யும் போது பெருமளவு மக்கள் ஒன்றுகூடாத வகையில் சமூக இடைவெளியினை பேணி விற்பனை செய்தல் கட்டாயமாகும். இது தொடர்பாக உள்ளுர் அதிகார சபைகள்இ பிரதேச செயலாளர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கொடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 பேக்கரி உற்பத்திகளின் செயற்பாடுகள் வழைமைபோல் நடமாடும் சேவையில் விற்பனை செய்வதற்கு எந்தத்தடைகளும் இல்லை.

 அரிசி ஆலைகளை இயக்குவதற்கும் ஆலைத்தொழிலாளர்கள் ஊரடங்கு காலப்பகுதியில் வந்து செல்வதற்கு உரிய அனுமதிகளை அரிசி ஆலை உரிமையாளர்கள்; பிரதேச செயலாளர் ஊடாக அவ்அவ் பொலிஸ் நிலையங்களில் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது.

 மீன்களை பதனிடுவதற்கான ஐஸ்கட்டி தொழிற்சாலைகளை இயங்குவதற்கு உரிய அனுமதியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


 கூட்டுறவு கடைகள், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், ஊயசபடைடள சிறப்பு அங்காடிகள் மற்றும் வணிக கழகத்தினர் போதுமான உணவு கையிருப்பினை வைத்துக்கொள்ளவும் விநியோகத்தினை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அவ்வாறு உணவு பற்றாகுறைகள் ஏற்படின் உரிய முறையில் அறிக்கையிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 அவசிய சேவைகளின் பொருட்டு ஊரடங்கு காலத்திலும் எரிபொருள் நிலையங்கள் திறந்திருப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 அத்தியாவசிய உணவு விநியோகங்களில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள் மாத்திரம் போக்குவரத்தில் ஈடுபட ஊரடங்கு நேர அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என்பதை கவனத்தில்கொள்ளவும்.

 குறிப்பிட்ட ஊரடங்கு நேரங்களில் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்கும் விற்பனையாளர்கள் பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ற வகையில் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


மேற்படி ஊரடங்கு சட்டம், தனிமைப்படுத்தல்கள் குறித்த வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் மேற்படி ஏற்பாடுகளுக்கு இணங்க அனைவரும் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் இவ்விடயத்தில் முன்னுரிமை கொடுத்து எமது மாவட்டத்தில் மேற்படி வைரஸ் தொற்றின் பரம்பலை தடுப்பதற்கு தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புக்கள் கோரப்படுகின்றது;. அத்துடன் மேற்படி ஏற்பாடுகளில் முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சலுடன் முறையிடலாம். மேலும் மேற்படி ஏற்பாடுகள் மறு அறிவித்தல்வரை அமுலில் இருக்கும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

 

தொலைபேசி இலக்கம் : - 021 - 2225000
தொலைநகல்                   : - 021 - 2222355
மின்னஞ்சல்                      : - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

கொரோனா தடுப்பு செயலணி,
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,
மாவட்ட செயலகம்,
யாழ்ப்பாணம்.