யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை (28.03.2020) அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்தின்போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் கீழ்வரும் விடயங்களை கூறியிருந்தார்.

 

1. யாழ் மாவட்டத்தில் தற்பொழுது அமுலில் இருக்கும் ஊரடங்குசட்டமானது இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடரக்கூடிய நிலை காணப்படுகின்றது. நேற்று மாலையிலிருந்து இந்த ஊரடங்கு சட்டமானது மேலும் மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவ் அறிவுறுத்தல்கள் சரியாக சென்றடைவதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.ஆகையால் சகல பிரதேச செயலாளர்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.

2. ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள நேரத்தில் அத்தியாவசியத் தேவையின் பொருட்டு மாத்திரமே கடைபிடிக்க மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.நடமாடும் பொருட்கள் சேவையினை வழங்குவதிலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த தீவிரப்படுத்தியுள்ளோம். ஆகவே ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் அக் கிராம உத்தியோகத்தர்இ சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் உதவியுடன் சில்லறை வியாபாரிகளை வீடு வீடாக பொருட்களைக் கொண்டு சென்று விநயோகிப்பதற்கும் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றோம். ஆகவே இந்த நடவெடிக்கைகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட இருக்கின்றன. பொருடத்தட்டுப்பாடு இல்லாதவண்ணம் சில்லறை வியாபாரிகளிடம் பொருட்களை போதுமானளவு சேகரித்து வைப்பதற்குரிய கோரிக்கை விடப்பட்டிருக்கின்றது. அதனை எமது பிரதேச செயலாளர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.

3 மேலும் பிரதேச செயலாளர்களை பிரதேச செயலாளர்கத்தில் கடமையின் நிமிர்த்தம் தொடர்ந்து இருக்கும்படியும் மற்றும் அவர்களை அங்குள்ள பிரச்சினைகளை சூழ்நிலைக்கேற்ப கையாளும்படியும் பொலீஸ் உத்தியோகத்தர்களுடனும் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடனும் தொடர்புகொண்டு தீர்மானங்களை எடுத்து தங்களது பிரதேச பிரிவுகளிலேயே அமுல்படுத்தும்படியும் கூறியுள்ளேன்.

4. விசேட செயலணியின் பிரகாரம் சகல பிரதேச செயலாளர்களுக்கும் மற்றும் மாவட்ட விவசாயத்தினைக்களம்இ மாவட்ட கமநல தினைக்கள பணிப்பாளர் அவர்களுக்கும் அறிவுறுத்தல்களை கூறியிருக்கின்றேன். அத்தியாவசிய வெளியில் போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களின் பிரதேசத்திற்குரிய காவல்நிலையத்தில் தமது வெளிச்செல்க்கை மற்றும் உள் வருகையினை உறுதிப்படுத்திச்செல்லுமாறும் கேட்டிருக்கின்றேன். இதனால் வழி அனுமதிப்பத்திரத்தினை பெறுவது இலகுவாக இருக்கும்.

5 சமுர்த்தி பயனாளிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக முற்பணமாக வட்டியில்லா கடன் அடிப்படையில் தலா ரூபா ஐந்தாயிரம் (ரூ.5000) வழங்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. யாழ் மாவட்டம் முழுவதுமாக சுமார் 20 மில்லியன் ரூபா வரை வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்ந்தும் திங்கட் கிழமையிலிருந்து நடைபெறும் எனவும் இத்தொகையானது நடமாடும் சேவை மூலம் உதவி பெறுவதற்கு இலகுவாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.