• அகில உலக மருத்துவர் நல அமைப்பினால் ரூபா 720,000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

அகில உலக மருத்துவர் நல அமைப்பினால் யாழ் மாவட்டத்தில் உள்ள 24 நாலன்புரி நிலையங்களில் வசிக்கும் 410 குடும்பங்களும் மற்றும் நலன்புரி நிலையங்களில் வசித்து வெளியேறிய 310 குடும்பங்களுமாக மொத்தம் 720 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபா வீதம் ரூபா 720,000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு. த. சத்தியமூர்த்தி அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களிடம் கையளித்தார். இவை உடனடியாக மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களினால் பொதி செய்யப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டன. 

 1

Paalam Project  என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் ரூபா 1300.00 பெறுமதியான 155 உலர் உணவுப் பொதிகள் (அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, தேயிலை) மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டன. அவை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் பொதி செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் மொத்த பெறுமதி ரூபா 200,000.00 ஆகும்.

 

                                       palm project

சாந்திகம் நிறுவனம் ரூபா 1000.00 பெறுமதியான 300 உலர் உணவுப் பொதிகள் (அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, தேயிலை) மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அவை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் பொதி செய்யப்பட்டு உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தகுதியான பயனாளிகளுக்கு பகிந்தளிக்கப்பட்டது. இதன் மொத்த பெறுமதி ரூபா 300,000.00 ஆகும். 

 

 

 

 

santhikam

     
     
 • யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ரூபா 1000.00 பெறுமதியான 1000 உலர் உணவுப் பொதிகள் (அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, தேயிலை) மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அவை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் பொதி செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு பகிந்தளிக்கப்பட்டது. இதன் மொத்த பெறுமதி ரூபா 1,000,000.00 ஆகும்.                                                                                                                                                                                                                                                                    leads1

 • கியூடெக் கரித்தாஸ் என்பவரால் ரூபா 1000.00 பெறுமதியான 280 சிறுவர்களுக்கான பால் மா பொதிகள் வழங்கப்பட்டன. இவை பருத்தித்துறை, கோப்பாய், சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும் ரூபா 1,000.00 பெறுமதியான 265 உலர் உணவுப் பொருட்கள் (அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, தேயிலை) மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அவை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் பொதி செய்யப்பட்டு ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், உடுவில் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 

q tec

 • இந்துமா மன்றம் ரூபா 750.00 பெறுமதியான 180 உலர் உணவுப் பொதிகள் (அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு ) மேலதிக மாவட்ட செயலாளரிடம் (காணி) கையளிக்கப்பட்டது. அவை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் பொதி செய்யப்பட்டு சங்கானை மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மொத்த பெறுமதி ரூபா 135,000.00 ஆகும்.                                                                                                                                                                                                                                                                                                                        hindu
 

 

 
 

• தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானம் ரூபா 500.00 பெறுமதியான 100 உலர் உணவுப் பொதிகள் (அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு ) மேலதிக மாவட்ட செயலாளரிடம் (காணி) கையளிக்கப்பட்டது. அவை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் பொதி செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மொத்த பெறுமதி ரூபா 50,000.00 ஆகும். 

thurkathevi

 • LEADS நிறுவனம் ரூபா 450,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் (அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, தேயிலை, சமோசா, தேங்காய் எண்ணை, ரின் மீன், கடலை, மிளகாய் தூள் பக்கற்) மேலதிக மாவட்ட செயலாளரிடம் (காணி) கையளிக்கப்பட்டது. அவை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் பொதி செய்யப்பட்டு உடுவில், தெல்லிப்பளை, வேலணை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 

leads 

 ஹுமெடிக்கா நிறுவனத்தினரால் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த முள்ளி மற்றும் கூழாவடி கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக தலா 2000.00 ரூபா பெறுமதியான 100 உலர்  உணவுப்பொதிகள்    யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.. மேற்படி உணவுப் பொதிகள் பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் அனர்த்த முகாமைத்து உதவிப்பணிப்பாளர் மற்றும் ஹுமெடிக்கா நிறுவன உத்தியோகத்தர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

medica11