பிரதேச புள்ளிவிபர கைநூல் 2020 மற்றும் பிரதேச மூலவளத் திரட்டு 2020 ஆகியவற்றைத் தயாரித்ததில் யாழ்ப்பாண பிரதேச செயலகம், பதினைந்து பிரதேச செயலகங்களில் முதல் நிலையில் உள்ளது.

30-04-2020 வியாழக்கிழமை அன்று  யாழ்மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடலில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன், உதவித் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் மற்றும் அவரது அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தத்துடன் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு சிறந்த வழிகாட்டியாகவும், தேவையான அனைத்து தகவல்களையும் இலகுவாக பார்வையிடக் கூடியவாறும், மாவட்டத்தில் வளர்ச்சி வாய்ப்புக்கான அளவீட்டு கருவியாக இது செயல்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் தனது பாராட்டு செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

 stasitical book 2020