யாழ். மாவட்டத்தின் தேர்தல் தற்போதய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சந்திப்பு இன்றையதினம் (23.07.2020 ) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் மாவட்டத்தில் இதுவரை 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்.யாழ் தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 25 ஆம் திகதிக்கு பிறகு யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மத்திய முறைப்பாட்டு நிலையத்துக்கு மேலதிகமாக பன்முகப்படுத்தப்பட்ட வகையில் மேலும் மூன்று முறைப்பாட்டு நிலையங்களை சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களில் அமைக்கப்படவுள்ளன. இந்த நிலையங்களிலே வெளிமாவட்டத்தில் இருந்து விசேடமாக வரவழைக்கப்படுபவர்களுடன், யாழ் மாவட்ட அலுவலர்களும் இணைந்து கண்காணிப்பு மற்றும் முறைப்பாடு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
மேலும் தெரிவிக்கையில், தபால் மூலம் வாக்களிக்கும் தவறியவர்களுக்காக வாக்களிப்பதற்காக மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. அதற்கமைவாக யூலை மாதம் 24, 25 ஆம் திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் யூலை 29 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தங்கள் பிரிவிலுள்ள தபாலகங்களுக்கு சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

image7