நிதி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து 2019 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 160 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சனச அபிவிருத்தி வங்கியினால் அம் மாணவர்களுக்கு பரிசில் பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய கொவிட் 19 அனர்த்த சூழ்நிலை காரணமாக வழமையாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வந்த இந் நிகழ்வு இம் முறை பிரதேச செயலகங்களின் ஊடாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் புலமைப்பரிசில் கொடுப்பனவில் உயர்ந்த தொகையாக ரூபா 50000/= புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கு உரித்தான செல்வி உ. டுசாரா ( இளவாலை அருணோதயா கல்லூரி மற்றும் செல்வி வை. சகீனா, செல்வி பா. கபிசனா(யா. வேம்படி மகளிர் கல்லூரி) ஆகிய மூன்று மாணவர்களுக்கும் இன்று (19.08.2020) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு கிழக்கு சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு. பா. பிரதீபன், சனச அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர் ம. ஜெனகன் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் வைத்து மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இம் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 50000 ரூபா காசோலை, பரிசில் பொதிகள், சான்றிதழ்கள் மற்றும் சனச அபிவிருத்தி வங்கியின் ரூபா 8000/= பெறுமதியான காசோலை ஆகியன வழங்கப்பட்டன.




|