யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ) யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை திரை நீக்கம் செய்து இன்று 01.09.2020 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்துவைத்ததோடு யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக தனது கடமைகளை  பொறுப்பேற்றுக் கொண்டார்.இந் நிகழ்வில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டு ஆசியுரையினை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வட மாகாண அமைச்சின் செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள்  மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

 

 

img4

 img1

 

 img5 img3