மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஊடக கற்கை நெறியை கற்று வருகின்ற சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கருத்தமர்வு ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் 02.10.2020 அன்று இடம்பெற்றது.

ஊடக கற்கை நெறியை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு குறித்த செயலமர்வு இடம்பெற்றது. இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல,  தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக, தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும்,  யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன்,அமைச்சுக்களின் செயலாளர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கை ரீதியாக உள்ள 25 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் ஊடக கற்கை நெறியை மேம்படுத்தி அதனை பல்கலைக்கழகம் வரை கற்பித்து ஊடகத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கில் குறித்த செயல் அமர்வு முதன் முதலாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

img1      img2

 

img3      img4